‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-08 18:49 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நத்தம் கிராமத்தில் ஏழூர்பட்டியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் வீணாக சென்றது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் குழாயை சீரமைத்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாகராஜசோழன், நத்தம், திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம் 22-வது வார்டு தோப்புத்தெரு விஸ்தரிப்பு நுழைவுவாயில் பகுதியில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக்கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவி, தோப்புத்தெரு விஸ்தரிப்பு, திருச்சி.
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ராஜா காலனி வழியாக செல்லும் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள சாலையின் குறுக்கே கழிவுநீர் செல்வதற்காக புதிதாக சிறிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பாலம் சாலையை விட சற்று உயரமாக கட்டப்பட்டு உள்ளதால் அந்த வழியாக அதிவேகமாக செல்வோர் மற்றும் இரவு நேரங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருபாகரன், ராஜா காலனி திருச்சி.

மேலும் செய்திகள்