அரக்கோணத்தில் ரெயில்வே போலீஸ் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரக்கோணத்தில் ரெயில்வே போலீஸ் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-02-08 18:49 GMT
அரக்கோணம்

அரக்கோணம் அரசு ஐ.டி.ஐ.யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரக்கோணம் ரெயில்வே போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் மாணவ- மாணவியர்களிடையே ரெயில்வே கேட், செல் போன் பேசி கொண்டு தண்டவாளங்களை கடக்க கூடாது, தண்டவாளத்தை கடந்து செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கி கூறினர். மேலும், கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் அவசியம் என்றும், பயணம் செய்யும் போது ரெயில்களின் ஜன்னல் கம்பி மற்றும் படிகளில் தொங்கியபடி செல்லக் கூடாது என்றும் அதனால் ஏற்பட கூடிய பாதிப்புகள் குறித்தும் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்