கரூர்
கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அமராவதி ஆற்றின் அருகே உள்ள படித்துறையில் கஞ்சா வைத்து விற்பனை செய்த முகமதுஅபு(வயது 23) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கஞ்சா விற்ற ஹரிபிரசாத்(22) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.