பாம்பனில் கரையேற்றப்பட்ட கடற்படை கப்பல்

பாம்பனில் சூறாவளி காற்றில் சிக்கி சேதமடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலை, பாம்பனில் கரையேற்றி சீரமைக்கும் பணி நடந்தது.

Update: 2022-02-08 17:05 GMT
ராமேசுவரம்,

பாம்பனில் சூறாவளி காற்றில் சிக்கி சேதமடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலை, பாம்பனில் கரையேற்றி சீரமைக்கும் பணி நடந்தது.

கப்பல் சேதம்

கேரள மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படைக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய அதிவேக ரோந்து கப்பல் ஒன்று புதிதாக கட்டப்பட்டது.. இந்த கப்பல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக பாம்பன் தூக்கு பாலம் அருகே வந்தது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் அது நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்று காரணமாக கப்பலின் நங்கூரம் அறுந்தது. இதனால் கப்பலானது சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் கப்பலின் அடிப்பகுதியில் உள்ள புரோபெல்லர் எனப்படும் கருவி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

சீரமைப்பு பணி

அதைத்தொடர்ந்து அந்த கடற்படை கப்பல் பழுது  பார்க்கும் பணிக்காக பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் கரை ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. அங்கு கப்பலின் சேதமான பகுதியை சரிசெய்யும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. நேற்றுடன் கப்பல் சீரமைக்கும் பணி முடிவடைந்தது.
இதை தொடர்ந்து அந்த கப்பல் இன்று(புதன்கிழமை) கடலில் இறக்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் அந்த கப்பல் தூக்குப்பாலத்தை கடந்து ெசல்லும். அதன்பிறகு அந்த கப்பல் விசாகப்பட்டினம் கடற்படை நிலையத்திற்கு சென்றடையும்.

மேலும் செய்திகள்