மூதாட்டியிடம் நகை திருட்டு
மூதாட்டியிடம் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள வழிஊரை சேர்ந்தவர் மனோன்மணி (வயது72). ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளர். இவரது கணவர் பாலகுரு பணி ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்கள் 2 பேரும் வீட்டு கதவை பூட்டாமல் தூங்கிக்கொண்டிருந்தனர் அதிகாலையில் யாரோ மனோன்மணியின் காலை மிதிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதால் மனோன்மணி விழித்து பார்த்த போது வீட்டில் இருந்து வெளியே ஒரு நபர் ஓடுவது தெரிந்தது. பின்னர் அவரது கழுத்தில் கிடந்த தாலி, தங்க காசு, குண்டுமணி ஆகியவற்றை காணவில்லை. இதுபற்றி மனோன்மணி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.