விபத்தில் 3 பேர் காயம்

விபத்தில் 3 பேர் காயம்

Update: 2022-02-08 16:55 GMT
திருப்புவனம்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, திருவாதவூர் பக்கம் உள்ள ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பால்ச்சாமி (வயது 39), கருப்பணன் (40), பிரபு (38). இவர்கள் 3 பேரும் சக்குடிக்கு வந்து விட்டு ஆண்டிபட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பால்ச்சாமி ஓட்டினார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்து இருந்தனர். 
அதேபோல நாட்டரசன்கோட்டையில் இருந்து மதுரைக்கு ஒரு கார் வந்துள்ளது. அந்த காரை ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (42) என்பவர் ஓட்டி வந்தார். பூவந்தி அருகே உள்ள சக்குடி விலக்கு பகுதியில் வந்த போது காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில், பால்ச்சாமி, கருப்பணன், பிரபு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்