தர்மபுரி ஏல அங்காடியில் ரூ3¼ லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ3¼ லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

Update: 2022-02-08 16:51 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று இந்த அங்காடியில் பட்டுக்கூடு வரத்து குறைந்தது. விவசாயிகள் நேற்று 477 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் அதிகபட்சம் ரூ.824-க்கு விற்பனை செய்யப்பட்ட பட்டுக்கூடு விலை நேற்று ரூ.48 குறைந்தது. அதிகபட்சமாக ரூ.776 குறைந்தபட்சமாக ரூ.576, சராசரியாக ரூ.695 என்ற விலைகளில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது. ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 80 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை ஆனது.

மேலும் செய்திகள்