மாணவ மாணவிகள் 839 பேருக்கு 2 வது தவணை தடுப்பூசி

வால்பாறையில் மாணவ மாணவிகள் 839 பேருக்கு 2 வது தவணை தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-02-08 16:51 GMT
வால்பாறை

வால்பாறையில் மாணவ-மாணவிகள் 839 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

தடுப்பூசி போடும் பணி

வால்பாறை பகுதியில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நேற்று வரை 205 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒருசிலர் ஆஸ்பத்திரியிலும், பலர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வால்பாறையில் கிட்டத்தட்ட 59 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த மாதம் 3-ந்தேதி 10,11,12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல் தவனை கொரோனா தடுப்பூசி கோவேக்சின் போடப்பட்டது.
முதல் தவனை தடுப்பூசி போடப்பட்டு 30 நாட்களை கடந்த நிலையில் 2-வது தவனை கொரோனா தடுப்பூசி போடும் பணி வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அரசு மேல்நிலை, அரசு உயர்நிலை மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் நடந்தது. 

839 மாணவ-மாணவிகளுக்கு

இதில் மொத்தம் 839 பேருக்கு மாணவ-மாணவிகளுக்கு கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர். வால்பாறை, சோலையாறு நகர் மற்றும் முடீஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ குழுவினர் பகுதி சுகாதார செவிலியர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கே சென்று மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். 2-வது தவனை தடுப்பூசி போட விடுபட்டவர்களுக்கும் ஒரிரு நாளில் போட்டு முடிக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்