செல்போனில் தொடர்பு கொண்டு வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்
வெளியூரில் வசிக்கும் வேட்பாளர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
வேடசந்தூர்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது. வேட்புமனு தாக்கல், பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களை ஈர்க்க வீடு தேடி சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், எரியோடு, பாளையம், வடமதுரை, அய்யலூர் ஆகிய பேரூராட்சிகளில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சுழன்றடித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ஒரு வார்டுக்கு அதிகபட்சமாக 1,000 வாக்குகள் மட்டுமே உள்ளது. இதனால் வாக்காளர்களை எளிதில் கண்டறிந்து வாக்கு சேகரிக்க வேட்பாளர்களுக்கு வாய்ப்புள்ளது. அதிலும், உள்ளூரில் வசிப்பவர்களிடம் எந்த நேரத்திலும் சென்று வாக்கு சேகரித்துக்கொள்ளலாம். ஆனால் உள்ளூரில் வாக்கு இருந்து வெளியூர் மற்றும் பக்கத்து ஊர்களுக்கு குடிபெயர்ந்த வாக்காளர்களை கண்டறிவது சற்று சிரமமானது. இதனால் வெளியூரில் வசிக்கும் வாக்காளர்கள் யார்-யார் என்று வேட்பாளர்கள் கணக்கெடுத்து வருகின்றனர். அவ்வாறு கணக்கெடுத்து வெளியூரில் வசிக்கும் வாக்காளர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். அதேபோல் பக்கத்து ஊர்களில் வசிக்கும் வாக்காளர்களை நேரில் சந்தித்து வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் ஓரிரு வாக்குகள் என்பவை முக்கியமானது. கடைசி நேரத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு உண்டு என்பதால் வேட்பாளர்கள் இதுபோன்ற அணுகுமுறைகளை பின்பற்றி வாக்கு சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.