போக்சோவில் மளிகை கடைக்காரர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேனி அல்லிநகரத்தை சேர்ந்த மளிகை கடைக்காரரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-08 16:17 GMT
தேனி: 

தேனி அல்லிநகரம் அண்ணாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). இவர் அல்லிநகரத்தில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் சம்பவத்தன்று 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த மற்றொரு சிறுமி, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு சென்ற போது பாண்டியன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

 இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்