திண்டுக்கல் அருகே கஞ்சா வியாபாரி ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
திண்டுக்கல் அருகே ஓட, ஓட விரட்டி கஞ்சா வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் அருகே ஓட, ஓட விரட்டி கஞ்சா வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கஞ்சா வியாபாரி
திண்டுக்கல் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (வயது 40). இவர் திண்டுக்கல் அருகே சிறுநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சிறுநாயக்கன்பட்டி வனத்து சின்னப்பர் குருசடி என்ற இடத்தில் ஜான்பீட்டர் நேற்று கஞ்சா விற்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள், இங்கு எப்படி கஞ்சா விற்கலாம்? என்று கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த நபர்கள் ஜான்பீட்டரை தாக்க தொடங்கினர். இதனால் அவர்களிடம் இருந்து தப்பித்து அவர் ஓட்டம் பிடித்தார்.
இருப்பினும் 2 பேரும் பின்தொடர்ந்து விடாமல் துரத்தினர். அங்குள்ள பெரிய கண்மாய் மறுகால் பாயும் இடத்தில் ஓடியபோது ஜான்பீட்டரை மர்மநபர்கள் மடக்கிப்பிடித்தனர்.
வெட்டிக்கொலை
பின்னர் 2 பேரும் தங்களிடம் இருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஜான்பீட்டரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதையடுத்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஜான் பீட்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்தனர்.
இதற்கிடையே கொலை சம்பவம் குறித்து அறிந்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொழில் போட்டி காரணமா?
பின்னர் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறுநாயக்கன்பட்டி ஊருக்குள் சென்றது. அங்கு ஒரு வீட்டுக்குள் சென்ற மோப்பநாய், பின்னர் பின்பக்க வாசல் வழியாக வெளியே ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கஞ்சா வியாபாரி ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.