போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது
பழனியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பழனி:
பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்தனகுமார்(வயது 48). இவர் பழனி புது தாராபுரம் சாலையில் உள்ள ெரயில்வே கேட் அருகில் தனது நண்பர் ஆனந்த்குமாருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்தவர்களுக்கும், ஆனந்த்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அடிதடியாக மாறியது. இதில் அவர்கள் ஆனந்த்குமார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தனகுமாரை தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தி வந்தனர். இதில் தாக்கியவர் பழனி பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் யுவராஜ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.