தலைமை ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவன் படுகாயம்; ரெட்டியார்சத்திரம் அருகே பரபரப்பு
ரெட்டியார்சத்திரம் அருகே தலைமை ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
கன்னிவாடி:

அரசு மேல்நிலைப்பள்ளி
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கே.புதுக்கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தினசரி மாலை ஒரு வேளை கணினி பயிற்சி நடைபெறுவது வழக்கம். இதற்காக தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கணினி பயிற்சிக்கு ஆசிரியர் வரவில்லை. இதனால் 8-ம் வகுப்பு மாணவர்கள் 5 பேர், விளையாட்டு மைதானத்திற்கு செல்ல அனுமதி கேட்டு தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றனர். அங்கு தலைமை ஆசிரியர் செல்போனில் பேசி கொண்டிருந்தார்.
மாணவனுக்கு பிரம்படி
நீண்ட நேரம் அவர் செல்போனில் பேசி கொண்டிருந்ததால், அவரது அறைக்கு வெளியே காத்திருந்த மாணவர்களில் சசிக்குமார் என்ற மாணவன் மட்டும் தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்றான். அப்போது விளையாட்டு மைதானத்திற்கு செல்ல அனுமதி வேண்டும் என்று சசிக்குமார் கேட்டார். இருப்பினும் அவர் தொடர்ந்து செல்போனில் பேசி கொண்டிருந்தார்.
இதனால் சசிக்குமார் மீண்டும் அனுமதி கேட்டான். அப்போது ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், தொந்தரவு செய்ததாக கூறி மாணவனை பிரம்பால் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் மாணவனின் 2 கைகளிலும் பிரம்படி பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவன் அந்த இடத்திலேயே கதிகலங்கி போனான்.
மருத்துவமனையில் அனுமதி
இதனால் சக மாணவர்கள், சசிக்குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி பள்ளிக்கு வந்த அவனது பெற்றோர், சசிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சசிக்குமாரின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டபோது, மாணவனை தலைமை ஆசிரியர் பிரம்பால் அடித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த சம்பவம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.