நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 778 பேர் போட்டி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 778 பேர் போட்டியிடுகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. 1,001 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஆகும். காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 210 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.
காஞ்சீபுரம் மாநகராட்சியில் உள்ள 51 பதவிகளுக்கு 314 பேரும், குன்றத்தூர் நகராட்சியில் 30 பதவிகளுக்கு 122 பேரும், மாங்காடு பேரூராட்சி 27 பதவிகளுக்கு 129 பேரும், வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு 58 நபர்களும், உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 74 நபர்களும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 81 நபர்களும் போட்டியிடுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 156 பதவிகளுக்கு 778 பேர் தற்போது போட்டியிடுகின்றனர்.