ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

ஏரல் அருகே ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-02-08 14:02 GMT
ஏரல்:
ஏரல் அருகே பண்டாரவிளையில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்தபோது, அதில் 10 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோவை  ஓட்டி வந்த ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பராக்கிரமபாண்டியை சேர்ந்த காசிபாண்டி மகன் இசக்கிராஜா (வயது 33) என்பவரை கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த மினி லோடு ஆட்டோவை போலீசர் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி எங்கு இருந்து கடத்தப்பட்டது? என அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்