950 கிராம் எடையில் பிறந்த பெண் குழந்தை டாக்டர்களின் சிகிச்சையால் எடை அதிகரித்தது

950 கிராம் எடையில் பிறந்த பெண் குழந்தை டாக்டர்களின் சிகிச்சையால் எடை அதிகரித்தது

Update: 2022-02-07 21:10 GMT
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 14-ந் தேதி உசிலம்பட்டியை சேர்ந்த 22 வயது ெபண்ணுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த பெண் குழந்தை சத்து குறைபாடு காரணமாக 950 கிராம் எடையுடன் எடைகுறைவாக பிறந்தது. 
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அக்குழந்தையை பச்சிளம் குழந்தைகள் பிரிவு மருத்துவர்களான ராதாமணி, தமிழ்மொழி, செந்தில்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் 55 நாட்கள் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பிரிவில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 
இந்த குழந்தை தற்போது 1,800 கிராம் அளவு எடை அதிகரித்து ஆரோக்கியத்துடன் உள்ளது. நேற்று அந்த குழந்தை பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டது. 
அரசு டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் ஆபத்தான நிலையில் இருந்த பெண் குழந்தை சிகிச்சை மூலம் எடையை அதிகரிக்க செய்த மருத்துவர்களை உறவினர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்