உல்லாசம் அனுபவித்துவிட்டு விவாகரத்தான இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு
உல்லாசம் அனுபவித்துவிட்டு விவாகரத்தான இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக, தனியார் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
பெங்களூரு: உல்லாசம் அனுபவித்துவிட்டு விவாகரத்தான இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக, தனியார் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
விவாகரத்து
பெங்களூரு இந்திராநகர் பகுதியில் 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர், 2 பிள்ளைகள் இருந்தனர். இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் கணவரை பிரிந்தார். மேலும் விவாகரத்தும் பெற்றார். இதற்கிடையே அந்த இளம்பெண் இந்திராநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது இளம்பெண்ணுக்கும், அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் சாகிப் அகமது குரேஷி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணிடம், சாகிப் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது.
திருமணம் செய்ய மறுப்பு
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இளம்பெண்ணும், சாகிப்பும் பதிவு திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் திருமண நாளன்று பல்வேறு காரணங்களை கூறி சாகிப் திருமணத்தை தள்ளிவைத்து உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த இளம்பெண்ணுடன் பேசுவதை சாகிப் தவிர்த்து வந்து உள்ளார்.
மேலும் இளம்பெண்ணை திருமணம் செய்யவும் சாகிப் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றியதாக சாகிப் மீது இளம்பெண் இந்திராநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் சாகிப் மீது இந்திராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.