நகை முத்திரையிடும் கடையில் தீ விபத்து

நகை முத்திரையிடும் கடையில் தீ விபத்து

Update: 2022-02-07 20:28 GMT
மலைக்கோட்டை, பிப்.8-
 திருச்சி மலைக்கோட்டை நுழைவு வாயில் அருகே பெரிய கடைவீதி, சின்னக்கடை வீதி, என்.எஸ்.பி.ரோடு சந்திப்பு பகுதியில் நகை கடை உள்ளது. இந்த கடையின் மேல் மாடியில் நகைகளின் தரத்தை சோதித்து ஹால்மார்க் முத்திரையிடும் கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் சென்னையில் உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த கடையில் திருச்சி மாநகர் மட்டுமல்லாது மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் தயார் செய்யப்பட்ட நகைகளுக்கு முத்திரை பதிக்க கொண்டு வருவார்கள். இந்த கடையில் நேற்று மாலை பணியாளர்கள் வேலையில் இருந்தபோது திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். இதில், எவ்வளவு ேசதம் ஏற்பட்டது என்பது உடனடியாக தெரியவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்