காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
சேதமடைந்த வெங்காய பயிருக்கு காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாய சங்கத்தினர் பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், கடந்த 2018 -2019, 2019-2020-ம் ஆண்டுக்கான காரியாபட்டி தாலுகா ஆவியூர், அரசகுளம், மாங்குளம், கம்பிகுடி, சுரண்டி வருவாய் கிராமங்களுக்கு வெங்காய பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. வெங்காயம் பயிர் காப்பீட்டுக்கான தொகை செலுத்தப்பட்டும் சேதம் அடைந்த பயிருக்கு இதுவரை முழுமையான காப்பீட்டு தொகை வழங்கப்படாதநிலை உள்ளது. ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் செலவு செய்து விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.