சிவகங்கை மாவட்டத்தில் 1,185 பேர் போட்டி

சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 285 வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,185 பேர் போட்டியிடுகின்றனர்.

Update: 2022-02-07 19:29 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 285 வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,185 பேர் போட்டியிடுகின்றனர்.

நகராட்சி

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை,காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகளும் 11 பேரூராட்சிகளும் உள்ளன. தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 285 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 1,185 பேர் போட்டியிடுகிறாகள்.
சிவகங்கை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளுக்கு 125 பேர் போட்டியிடுகின்றனர். காரைக்குடி நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளுக்கு 212 பேர் போட்டியிடுகின்றனர். தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளுக்கு 112 பேர் போட்டியிடுகின்றனர் மானாமதுரை நகராட்சிகள் மொத்தம் உள்ள 27 வார்டுகளுக்கு 95 பேர் போட்டியிடுகின்றனர்.

பேரூராட்சி

இதேபோல இளையான்குடி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளுக்கு 100 பேர் போட்டியிடுகின்றனர். கானாடுகாத்தான் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளுக்கு 37 பேர் போட்டியிடுகின்றனர். கண்டனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கு 53 பேர் போட்டியிடுகின்றனர். கோட்டையூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கு 57 பேர் போட்டியிடுகின்றனர்.
 நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளுக்கு 39 பேர் போட்டியிடுகின்றனர் நெற்குப்பை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளுக்கு 32 பேர் போட்டியிடுகின்றனர். பள்ளத்தூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கு 39 பேர் களத்தில் நிற்கின்றனர். புதுவயல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கு 86 பேர் போட்டியிடுகின்றனர். சிங்கம்புணரி பேரூராட்சிகள் மொத்தம் உள்ள 18 வார்டுகளுக்கு 50 பேர் போட்டியிடுகின்றனர். திருப்புவனம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 உறுப்பினர் பதவிகளுக்கு 62 பேர் போட்டியிடுகின்றனர். திருப்பத்தூர் பேரூராட்சிகள் மொத்தம் உள்ள 18 வார்டுகளுக்கு 86 பேர் போட்டியிடுகின்றனர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 285 வார்டு உறுப்பினர் பதவிக்கு 1185 பேர் போட்டியிடுகின்றனர்.

மேலும் செய்திகள்