குலசேகரத்தில் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.80 ஆயிரம் பறிமுதல்
குலசேகரத்தில்மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கவும், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு அருகே டான்செலின் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் கடம்பன்மூடு பகுதியை சேர்ந்த ரப்பர் மர வியாபாரி லாசர் (வயது 54) வந்தார். அந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் சோதனையிட்ட போது அதில் ரூ.80 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த பணத்துக்கு உரிய ஆவணத்தை அவர் காட்டவில்லை. இதனை தொடர்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.