ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1067 பேர் போட்டி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரகளின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 1067 பேர் போட்டியிடுகின்றனர்.

Update: 2022-02-07 18:18 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரகளின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 1067 பேர் போட்டியிடுகின்றனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புறஉள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 

 அரக்கோணம் நகராட்சியில் 216 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 49 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 161 பேர் போட்டியிடுகின்றனர்.

ஆற்காடு நகராட்சியில் 116 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். 2 பேர் போட்டியிடன்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 18 பேர் வாபஸ் பெற்றதை தொடர்ந்து 96 பேர் போட்டியிடுகின்றனர்.

மேல்விஷாரம் நகராட்சியில் 137 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 6 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 129 பேர் போட்டியிடுகின்றனர்.

ராணிப்பேட்டை நகராட்சியில் 126 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 123 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 23 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 100 பேர் போட்டியிடுகின்றனர்.

சோளிங்கர் நகராட்சியில் 167 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 46 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 116 பேர் போட்டியிடுகின்றனர். 

வாலாஜா நகராட்சியில் 92 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 7 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 86 பேர் போட்டியிடுகின்றனர்.

மொத்தமுள்ள 6 நகராட்சிகளில் 686 பேர் போட்டியிடுகின்றனர்.

பேரூராட்சி

அம்மூர் பேரூராட்சியில் 70 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 19 பேர் வாபஸ் பெற்றதை தொடர்ந்து 51 பேர் போட்டியிடுகின்றனர். 

அதேபோன்று கலவை பேரூராட்சியில் 48 பேரும், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 57 பேரும், நெமிலி பேரூராட்சியில் 46 பேரும்,  பனப்பாக்கம் பேரூராட்சியில் 41 பேரும், தக்கோலம் பேரூராட்சியில் 53 பேரும், திமிரி பேரூராட்சியில் 44 பேரும் போட்டியிடுகின்றனர். 

திமிரி பேரூராட்சியில் ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விளாப்பாக்கம் பேரூராட்சியில் ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 பேர் போட்டியிடுகின்றனர்.

மொத்தமுள்ள 8 பேரூராட்சிகளில் 447 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 59 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். இறுதியாக 381 பேர் போட்டியிடுகின்றனர்.

மாவட்டம் முழுவதிலும் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் 4 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1,067 பேர் போட்டியிடுகின்றனர்.

மேலும் செய்திகள்