தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு

Update: 2022-02-07 17:59 GMT
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு

வீணாகும் குடிநீர்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து 1-ம் மைல் பகுதிக்கு செல்லும் நகராட்சி குழாய்கள் பெரும்பாலான இடங்களில் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது. பழுதடைந்த குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் பொருத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அங்கு புதிய குழாய்களைப் பொருத்தி குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
சைனூதீன், கூடலூர்.

பொதுமக்களுக்கு இடையூறு

  கூடலூர் நகரில் போக்குவரத்து நெருக்கடி அதிகளவில் உள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் காலை மாலை நேரத்தில் மாணவ மாணவிகள் அதிகளவில் சென்று வருகிறார் கள். இந்த நேரத்தில் இளைஞர்கள் சிலர் மிக அதிக சத்தம் கொண்ட சைலன்சர் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் களில் சென்று வருகிறார்கள். இந்த சத்தம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ஜெயக்குமார், கூடலூர்.

புகையிலை பொருட்கள் விற்பனை

  பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெட்டி கடைகள், மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை இளைஞர் கள் பலர் வாங்கி பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். பெயரளவுக்கு மட்டும் போலீசார் சிலவற்றை பறிமுதல் செய்கிறார்கள். எனவே கடும் நடவடிக்கை எடுத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதைை தடுக்க வேண்டும்.
  பானுமதி, பொள்ளாச்சி.

குவிந்து கிடக்கும் கற்கள்

  கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் இடதுபுறம் பெட்ரோல் பங்க் அருகில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உள்ளன. நீண்ட நாட்களாகவே அவை அள்ளப்படாமல் ஜல்லி கற்கள் அப்படியே உள்ளதால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த ஜல்லிக் கற்களை அகற்ற வேண்டும்.
  மகேஷ், கோவை.

விபத்து ஏற்படும் அபாயம் 

  ஆனைமலை முக்கோணம் பகுதியில் பயணிகள் காத்து நிற்க நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் கோட்டூர் மற்றும் ஆழியாறு ஆகிய பகுதிகளுக்கு செல்ல பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தாமல் சாலையில் உள்ள தடுப்பு சுவர்களில் அமர்ந்து இருக்கிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
  ஆளவந்தான், ஆலைமலை.

குப்பைக்கிடங்காக மாறிய சுடுகாடு 

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியில் பேரூராட்சிக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு தற்போது குப்பை கிடங்காக மாறி வருகிறது. ஏராளமான குப்பைகள் அங்கு கொட்டப்பட்டு வருவதால், உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கொண்டு செல்லும்போது கடும் துர்நாற்றம் வீசுவதால் பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுடுகாட்டில் குவிந்து உள்ள குப்பைகளை சுத்தம் செய்வதுடன், அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
சையது மஜீத், சூளேஸ்வரன்பட்டி.

மரக்கிளை அகற்றப்படுமா?

  கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு மரக்கிளை உடைந்து நடைபாதையில் விழுந் தது. கடந்த ஒரு வாரம் ஆகியும் அந்த மரக்கிளை அகற்றப்பட வில்லை. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அவர்கள் நடைபாதையை விட்டு சாலையில் இறங்கி நடக்க வேண்டிய நிலை உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து அந்த மரக்களையை அகற்ற வேண்டும்.
  சண்முகராஜா, ஆர்.எஸ்.புரம்.

குண்டும் குழியுமான சாலை

  கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒண்டிப்புதூரில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் அமைக்கப்பட்டு உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருவதால் காயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்.
  சக்திவேல், சிங்காநல்லூர்.

ஆபத்தான மின்கம்பம் 

  கோவை விளாங்குறிச்சி கூட்டுறவு நகரில் ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் எந்த நேரத்திலும் கீழே விழக்கூடிய நிலையில் இருக்கிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாய்ந்த நிலையில் எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் இந்த மின்கம்பத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
  கிருஷ்ணமூர்த்தி, விளாங்குறிச்சி.

வேகத்தடை வேண்டும்

  கோவை அருகே உள்ள சோமனூர் கிருஷ்ணாபுரம் செந்தில் நகர் பஸ்நிறுத்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல முடிவது இல்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு வேகத்தடை அமைத்தால் விபத்து நடப்பதை தடுக்கலாம். அதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
  கணேசன், சோமனூர்.
  

மேலும் செய்திகள்