நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1214 பேர் போட்டி
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1214 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 347 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1214 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 347 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கிறது. கடந்த 28-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி என அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் சார்பில் 1595 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 5-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
இதில் 33 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மீதமுள்ள 1562 ஏற்கப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது.
ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 195 வேட்பு மனுக்களில் 65 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 130 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திருவண்ணாமலை நகராட்சி
திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 314 வேட்பு மனுக்களில் 43 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 271 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திருவத்திபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 159 வேட்பு மனுக்களில் 26 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 133 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் ஏற்கப்பட்ட 147 வேட்பு மனுக்களில் 30 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 117 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
போட்டியின்றி தேர்வு
செங்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 110 வேட்பு மனுக்களில் 23 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 87 பேர் போட்டியிடுகின்றனர்.
சேத்துப்பட்டு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 95 வேட்பு மனுக்களில் 25 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 70 பேர் போட்டியிடுகின்றனர்.
தேசூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 57 வேட்பு மனுக்களில் 14 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 43 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
களம்பூர் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 67 வேட்பு மனுக்களில் 12 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 55 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கண்ணமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 71 வேட்பு மனுக்களில் 29 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 80 வேட்பு மனுக்களில் 16 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 64 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பெரணமல்லூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 48 வேட்பு மனுக்களில் 4 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
போளூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 87 வேட்பு மனுக்களில் 31 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 55 பேர் போட்டியிடுகின்றனர்.
1214 வேட்பாளர்கள் போட்டி
புதுப்பாளையம் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 75 வேட்பு மனுக்களில் 23 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 52 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வேட்டவலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் ஏற்கப்பட்ட 57 வேட்பு மனுக்களில் 6 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 51 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஆக மொத்தம் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கப்பட்டு இருந்த 1562 வேட்பு மனுக்களில் 347 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. அதன்படி 1214 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட களம் கண்டு உள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தேர்தல் நடைபெற குறுகிய நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.