ரூ2 லட்சம் பறிமுதல்

ரூ2 லட்சம் பறிமுதல்

Update: 2022-02-07 17:40 GMT

சரவணம்பட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. 

எனவே வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நேற்று கோவையை அடுத்த சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி அண்ணா நகர் குட்டை அருகே தனி தாசில்தார் மேரி வினிதா தலைமையில் பறக்கும் படையினர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக சூலூர் காடம்பாடியை சேர்ந்த சென்னியப்ப கவுண்டர் என்பவரது மகன் ராஜேந்திரன் என்பவர் காரில் வந்தார். அதை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். 

அப்போது காரில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ரூ.1.80 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி செயல் அலுவல ரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சரஸ்வதியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்