வைகை ஆற்றில் மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-02-07 17:08 GMT
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே ஆண்டிப்பட்டி வைகை ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் சிலர் மணல் அள்ளுவதாக சித்தர்கள்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் ரேவதி மற்றும் நிலக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரேவதி தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு ரோந்து சென்றனர். அப்போது ஆற்றில் மாட்டுவண்டியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த நபர்கள், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் வருவதை பார்த்ததும் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மணல் அள்ளியவர்கள் குண்டலபட்டியை சேர்ந்த நடேசன், சின்னபாண்டி, கிருஷ்ணன், கோவிந்தன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரேவதி கொடுத்த புகாரின்பேரில் நடேசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்