போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு
பழனியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பழனி:

சப்-இன்ஸ்பெக்டருக்கு வெட்டு
பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்தனகுமார் (வயது 48). இவர் பழனி போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது நண்பர் திருநகர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (38). இவர் மதுரை மண்டல கடன் வசூலிப்பு தீர்ப்பாயத்தில் பணியாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு சந்தனகுமாரும், ஆனந்தகுமாரும் பழனி புதுதாராபுரம் சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் இருந்து புதுநகர் செல்லும் சாலையில் நடந்து சென்றனர்.
அப்போது சாலையின் நடுவில் 2 பேர் மது அருந்திவிட்டு ஆபாசமாக பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சந்தனகுமார், ஆனந்தகுமார் ஆகியோர், அந்த நபர்களை தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் ஆனந்தகுமாரிடம் தகராறு செய்தனர். அப்போது அவர்களில் ஒருவர், தான் வைத்திருந்த அரிவாளால் ஆனந்தகுமாரை வெட்டினார். இதை தடுக்க வந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்தனகுமாருக்கும் வெட்டு விழுந்தது. பின்னர் மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
சூப்பிரண்டு பார்வையிட்டார்
இதுகுறித்து தகவலறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த ஆனந்தகுமார், சந்தனகுமாரை மீட்டு சிகிச்சைக்காக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பழனிக்கு விரைந்து வந்தார். பின்னர் மருத்துவமனைக்கு சென்று சந்தனகுமாரை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அதன்பிறகு சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிய மர்ம நபர்கள் 2 பேரை பிடிக்க பழனி டவுன் போலீசுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.