நீலகிரியில் 1,253 பேர் களத்தில் உள்ளனர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீலகிரியில் 1,253 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Update: 2022-02-07 15:16 GMT
ஊட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீலகிரியில் 1,253 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல்

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஊட்டி உள்பட 4 நகராட்சிகளில் 601 பேர், 11 பேரூராட்சிகளில் 781 பேர் என மொத்தம் 1,382 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 22 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 1,360 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இந்தநிலையில் இன்று வேட்புமனுக்களை திரும்ப பெற மாலை 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

அரசியல் கட்சி முக்கிய வேட்பாளர்கள் மாற்று வேட்பாளர்கள் மூலம் தாக்கல் செய்த மனுக்களை திரும்ப பெற்றனர். ஊட்டி நகராட்சியில் சுயேச்சை வேட்பாளர்கள் 5 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். 3 மணிக்கு பிறகு சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. ஒரே சின்னத்தை 2 பேர் கேட்ட வார்டுகளில் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஒட்டப்பட்டது.

104 பேர் திரும்ப பெற்றனர்

ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 198 பேர் போட்டியிடுகின்றனர். குன்னூர் நகராட்சியில் 4 பேர், கூடலூர் நகராட்சியில் 5 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 35 பேர், என 4 நகராட்சிகளில் 49 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். அதிகரட்டி பேரூராட்சியில் 16 பேர், பிக்கட்டி பேரூராட்சியில் 6 பேர், தேவர்சோலை பேரூராட்சியில் 2 பேர், உலிக்கல் பேரூராட்சியில் 5 பேர், ஜெகதளா பேரூராட்சியில் 3 பேர், கேத்தி பேரூராட்சியில் 6 பேர், கீழ்குந்தா பேரூராட்சியில் 5 பேர், கோத்தகிரி பேரூராட்சியில் 4 பேர்,

நடுவட்டம் பேரூராட்சியில் 3 பேர், ஓவேலி பேரூராட்சியில் 5 பேர் என மொத்தம் 11 பேரூராட்சிகளில் 55 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். மொத்தம் 104 வேட்பாளர்கள் திரும்பப் பெற்று உள்ளனர். ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகளில் 198 பேர், குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகளில் 141 பேர், கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகளில் 116 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகளில் 84 பேர் என 4 நகராட்சிகளில் 539 பேர் போட்டியிடுகின்றனர். அதிகரட்டி பேரூராட்சியில் 17 வார்டுகளில் 59 பேர், பிக்கட்டி பேரூராட்சியில் 14 வார்டுகளில் வார்டுகளில் 45 பேர், தேவர்சோலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் 76 பேர், உலிக்கல் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 70 பேர்,

1,253 வேட்பாளர்கள்

ஜெகதளா பேரூராட்சியில் 15 வார்டுகளில் 66 பேர், கேத்தி பேரூராட்சியில் 17 வார்டுகளில் 68 பேர், கீழ்குந்தா பேரூராட்சியில் 15 வார்டுகளில் 54 பேர், கோத்தகிரி பேரூராட்சியில் 21 வார்டுகளில் 121 பேர், நடுவட்டம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 43 பேர், ஓவேலி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 60 பேர், சோலூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 52 பேர் என மொத்தம் 11 பேரூராட்சிகளில் 714 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 291 வார்டுகளில் 1,253 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.

மேலும் செய்திகள்