மது விற்ற 26 பேர் சிக்கினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 26 பேர் போலீசாரிடம் சிக்கினர்

Update: 2022-02-07 14:03 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை, வெளிமாநில லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 44 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 26 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 12 பேரும், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 289 புகையிலைப் பாக்கெட்டுகள், 263 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 560 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்