கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க., சுயேச்சைகள் முற்றுகை

தி.மு.க. வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க., சுயேச்சைகள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-02-07 13:56 GMT
கோத்தகிரி

தி.மு.க. வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க., சுயேச்சைகள் முற்றுகையிட்டனர். 

வரிசை எண் தவறு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டில் போட்டியிட தி.மு.க. சார்பில் கற்பகம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை முன்மொழிந்து ஆண்ட்ரூஸ் என்பவர் கையெழுத்திட்டு இருந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது வரிசை எண்ணை வேட்புமனுவில் தவறாக பூர்த்தி செய்து இருந்ததாக தெரிகிறது. எனினும் அந்த வேட்புமனு ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதை கண்டித்தும், தி.மு.க. வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரியும் அ.தி.மு.க., சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் குவிக்கப்பட்டனர். 

உரிய நடவடிக்கை

இதையடுத்து அ.தி.மு.க., சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரி மணிகண்டனிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதை ஏற்று முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்