மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை கூறைநாடு சின்ன எரகலித்தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 75). இவர் சித்தர்க்காடு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையலராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ஜெயபாலன் வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். சித்தர்காடு மெயின் ரோடு பகுதியில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆனந்தக்குடி கிராமத்தைச்சேர்ந்த செல்வம் மகன் பாபு என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.