வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனம்
வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனம்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள், வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் திரையிடப்படுகிறது.
வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுந்தரம் தேர்தல் உடனிருந்தார். இந்த வாகனத்தின் மூலமாக பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.