மறைமலைநகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது

மறைமலைநகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2022-02-07 11:57 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கிழக்கரணை பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது அங்கு இருந்த 6 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓட முயன்றது. அவர்கள் 6 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபர்களிடம் சோதனை செய்தபோது கோணிப்பையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா, 2 பட்டாக்கத்தி, எடை எந்திரம் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். 

பிடிபட்ட 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர்கள் இலங்கையை சேர்ந்த சைமன்ராஜ் (வயது 24), பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கவுரிசங்கர் (23), தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த சுமன் (21), கார்த்திக் (23), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் (23), அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துமணி (23), என்பது தெரியவந்தது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்