மது விற்ற 2 பேர் கைது

நெல்லையில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-06 20:00 GMT
நெல்லை:

நெல்லை தச்சநல்லூர் போலீசார் கரையிருப்பு ெரயில்வே கேட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மது விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த துரை மனைவி சுப்புலட்சுமி (வயது 47) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் நெல்லை மேலப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே மது விற்றதாக கருங்குளம் பகுதியை சேர்ந்த இக்பால் (40) என்பவரை நெல்லை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 28 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்