மினி லாரி மோதி வாலிபர் சாவு

சிவகங்கையில் மினிலாரி மோதி வாலிபர் இறந்தார்.

Update: 2022-02-06 19:39 GMT
சிவகங்கை,

 காரைக்குடி உதயா நகரைச் சேர்ந்தவர் கார்த்தீபன் (வயது 25). இவர் கடந்த 4-ந்தேதி சிவகங்கை வந்துள்ளார். அதன்பின்னர் குடும்பத்தினரால் இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை இந்நிலையில் நேற்று சிவகங்கையை அடுத்த சாமியார்பட்டி விலக்கு ரோட்டில் இவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியே வந்த மினி லாரி ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.. இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்