அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-02-06 19:20 GMT
அறந்தாங்கி, 
அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரெத்தினசபாபதி (வயது 66). கடந்த சில நாட்களாக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்