ரெயில் மோதி பெண் சாவு

மண்டபத்தில் ரெயில் மோதி பெண் பலியானார்.

Update: 2022-02-06 19:13 GMT
பனைக்குளம், 

மண்டபம் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 42). இவர் நேற்றுமுன்தினம் ராமேசுவரத்தில் உள்ள ஒரு வங்கிக்கு வந்து உள்ளார். பின்னர் வீட்டுக்கு திரும்பிய போது மண்டபம் கேம்ப் பகுதியில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தை ரெயில் வருவதை கவனிக்காமல் கடந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக ராமேசுவரத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரெயில் மோதியதில் அந்த பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராமேசுவரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்