பாணாவரம் பகுதியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் கைது
பாணாவரம் பகுதியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பெண் உள்பட 2 ேபரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காவேரிப்பாக்கம்
பாணாவரம் பகுதியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பெண் உள்பட 2 ேபரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனை
பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் மேசிட் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரங்காபுரம் கூட்ரோடு பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக பாணாவரத்தை நோக்கி வந்த ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த பெண் உள்பட 2 ேபரை நிறுத்தி விசாரித்தனர்.
ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் 2 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இருவரும் அரக்கோணம் பாராஞ்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சுதன் என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி (21), பாணாவரத்தை அடுத்த ஆயல் கிராமம் குரூப் அவுஸ் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் ஜோதிகுமரன் (19) எனத் தெரிய வந்தது.
வீடு புகுந்து கொள்ளை்
இருவரும் கடந்த வாரம் அய்யன்தாங்கல் பகுதியில் பட்டப்பகலில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ேள புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக கூறினர்.
மேலும் சோளிங்கர் நரசிங்கபுரம் பகுதியிலும், பாணாவரம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வளாகத்திலும் கொள்ளையடித்ததாக கூறினர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து மொத்தம் 13 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.