மொழையூர் வாய்க்கால் பாலத்தில் கைப்பிடி சுவர் கட்ட நடவடிக்கை
மொழையூர் வாய்க்கால் பாலத்தில் கைப்பிடி சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகரம் சேந்தங்குடி மதுரா நகர் சாலையில் மொழையூர் வாய்க்காலின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது. கைப்பிடி சுவர் இல்லாமல் இது மொட்டை பாலமாக உள்ளது. இந்த மதுரா நகர் பாலத்தை கடந்துதான் டெலிகாம் நகர், சுப்பிரபாதம் நகர், கனகசபை நகர், ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர்களுக்கு செல்ல முடியும். அங்குள்ள நகர்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு இது முக்கிய சாலையாக அமைந்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் உள்ள மொழையூர் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் கைப்பிடி சுவர் இல்லாமல் மொட்டை பலமாக உள்ளது. உடனடியாக அந்த பாலத்தில் கைப்பிடி சுவர் கட்ட அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.