லாரி மோதி முதியவர் சாவு

திருக்காட்டுப்பள்ளி அருகே லாரி மோதி முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-02-06 17:52 GMT
திருக்காட்டுப்பள்ளி:-

திருக்காட்டுப்பள்ளி அருகே லாரி மோதி முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 

லாரி மோதியது

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புதுச்சத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி (வயது86). இவர் சம்பவத்தன்று சைக்கிளில் திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது புதுச்சத்திரம் மெயின்ரோட்டில் உள்ள கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோதியது. 
இதில் பலத்த காயம் அடைந்த ராமமூர்த்தி உடனடியாக திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

விசாரணை

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்ரீதேவி, சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதியதில் முதியவர் பலியான சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்