குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

முத்துப்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் இறந்தார்.

Update: 2022-02-06 17:37 GMT
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையை அடுத்து உப்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உப்புக்குளம் உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த காத்தையன் மகன் மதன்குமார்(வயது31) என்பவர் கடந்த 4-ந்தேதி இரவு உப்புக்குளம் அருகே தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு குளத்தில் குளிக்க சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மதன்குமாரை அவரது  உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உப்புக்குளத்தில் மூழ்கி இறந்து கிடந்த மதன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்