மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Update: 2022-02-06 17:22 GMT
கரூர்
கரூர்
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க கரூர்- கோவை சாலையில் தொடங்கிய அணிவகுப்பு கரூர் பஸ் நிலைய ரவுண்டானா, மேற்கு பிரதட்சணம் சாலை, திண்ணப்பா கார்னர், சர்ச் கார்னர், தலைமை தபால் நிலையம், ஜவகர் பஜார் வழியாக வந்து கரூர் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த காவல்துறை கொடி அணிவகுப்பில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், கீதாஞ்சலி, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்