சின்னசேலம் அருகே ஏரியில் மூழ்கி பெண் சாவு
சின்னசேலம் அருகே ஏரியில் மூழ்கி பெண் சாவு
சின்னசேலம்
சின்னசேலம் அருகே கனியாமூர் ஏரியில் நேற்று காலை இளம் பெண் பிணமாக மிதந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஏரியில் பிணமாக மிதந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அந்த பெண் சின்னசேலம் தெற்குதெருவைச் சேர்ந்த யுவராணி (வயது 21) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்ட அவர் ஏரியில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது. இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.