வட்டார பார்வையாளர்கள் நியமனம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தஞ்சாவூர்:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் பார்வையாளர்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்களுக்கு தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக தஞ்சை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர் வைத்திநாதன் தஞ்சை வந்துள்ளார்.
தேர்தல் பார்வையாளருக்கு இணைப்பு அலுவலர்களாக ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இணை இயக்குனர், உதவி இயக்குனர், துணை கலெக்டர், நிலையிலான அலுவலர்கள் வட்டார பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தேர்தல் பணிகளை கண்காணித்து மாவட்ட அளவிலான தேர்தல் பார்வையாளருக்கு அறிக்கை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்போன் எண்கள்
வட்டாரப் பார்வையாளர்களின் செல்போன் எண் விவரம் வருமாறு:-
தஞ்சாவூர் மாநகராட்சி - 9489952703, கும்பகோணம் மாநகராட்சி - 9489952704, பட்டுக்கோட்டை நகராட்சி - 9489952705, அதிராம்பட்டினம் நகராட்சி - 9489952706, பேரூராட்சிகளான ஆடுதுறை - 9489952712, அம்மாப்பேட்டை - 9489952713, அய்யம்பேட்டை - 9489952714, சோழபுரம் - 9489952715, மதுக்கூர் - 9489952716, மேலத்திருப்பூந்துருத்தி - 9489952750, மெலட்டூர் - 9489952751, ஒரத்தநாடு - 9489952752, பாபநாசம் - 9489952753, பேராவூரணி - 9489952754, பெருமகளூர் - 9489952900, சுவாமிமலை - 9489952901, திருக்காட்டுப்பள்ளி - 9489952902, திருநாகேஸ்வரம் - 9489952903, திருப்பனந்தாள் - 9489952904, திருபுவனம் - 9489952954, திருவையாறு - 9489952955, திருவிடைமருதூர் - 9489952956, வல்லம் - 9489952957, வேப்பத்தூர் - 8668082220, 9489952958.
புகார் தெரிவிக்கலாம்
எனவே, பொதுமக்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தங்களது புகார்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க தேர்தல் பார்வையாளரின் நேரடி செல்போன் எண்ணான 9489952702-க்கும், தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள வட்டார பார்வையாளர்களின் செல்போன் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.