ஓசூரில் பட்டப்பகலில் துணிகரம் கத்திமுனையில் பெண்ணை மிரட்டி நகை பணம் கொள்ளை காரில் வந்த 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூரில் பட்டப்பகலில் கத்தி முனையில் பெண்ணை மிரட்டி நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
ஓசூரில் பட்டப்பகலில் கத்தி முனையில் பெண்ணை மிரட்டி, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கத்தி முனையில் கொள்ளை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்லூர் சாலை சுபவஸ்து லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 35). இவரது மகன் வேணு. இவர் நாய்கள் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் காரில் வேணு வீட்டுக்கு வந்தனர். அவர்கள் ஸ்ரீதேவியிடம் நாய் வாங்க வந்துள்ளதாக கூறினார்கள்.
இதையடுத்து ஸ்ரீதேவி தனது மகனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். அப்போது 3 பேரும் திடீரென ஸ்ரீதேவியை கத்தி முனையில் மிரட்டி வீட்டிற்குள் அழைத்து சென்றனர். அங்கு வீட்டில் இருந்த 5½ பவுன் நகைகள், 2 செல்போன்கள், ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து காரில் சென்று விட்டனர்.
போலீஸ் வலைவீச்சு
இது குறித்து ஸ்ரீதேவி ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.