வரும் ஆண்டுகளில் நீட் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் கலெக்டர் ஸ்ரீதர் ஆசிரியர்களுக்கு அறிவுரை

வரும் ஆண்டுகளில் நீட் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்

Update: 2022-02-06 16:14 GMT
கள்ளக்குறிச்சி

பாராட்டு விழா

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ‘நீட்’ தேர்வு மற்றும் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. 
இதில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு மருத்துவ படிப்புக்கு சேர்க்கை பெற்ற 12 அரசு பள்ளி மாணவ-மாணவிகளை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதிக மாணவர்கள்

பின்னர் கலெக்டர் பேசும்போது, பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை அளித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் ‘நீட்’ தேர்வு மூலம் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 12 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளனர். வரும் ஆண்டுகளில் அதிக அளவில் மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார். 
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கார்த்திகா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்