கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு அருகே சே.ஆண்டாபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் வசிப்பவர் ரவி, விவசாயி.
இவர் அவருடைய கிணற்றில் இன்று காலை தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்று பார்த்தார்.
அப்போது கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து இருந்தது தெரியவந்தது. உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் குப்பனிடம் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த புள்ளிமானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து காப்புக்காடு பகுதியில் விட்டனர்.