புதுச்சேரியில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரியில் தற்போது 4,152 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-02-06 07:44 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 192 பேர், காரைக்காலில் 68 பேர், ஏனாமில் 14 பேர், மாஹேவில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,64,186 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,948 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 756 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், புதுச்சேரியில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,58,096 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 4,152 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்