ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையில் போலீசார் அளத்தங்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 10 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டு பிடித்து, மோட்டார் சைக்கிள் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த எறும்புக்காடு பகுதியை சேர்ந்த தவசிலிங்கம் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.