மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது

Update: 2022-02-05 22:37 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று ரெயில்வே ரோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் வட்டவிளையை சேர்ந்த தங்கராஜ் (வயது 83) என்பதும், மது விற்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து தங்கராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
இதே போல ஆம்னி பஸ் நிலையம் அருகே மதுவிற்றதாக அய்யப்பன் (44) என்பவரை வடசேரி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் கம்பளம் பகுதியில் மது விற்றதாக வடலிவிளையை சேர்ந்த ஏசுதாஸ்(67) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்